உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகிருஷ்ணகிரி:தமிழ் புத்தாண்டையொட்டி கிருஷ்ணகிரியிலுள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில், வரட்டனப்பள்ளி நரசிம்மசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பழையபேட்டை நேதாஜி ரோடு சமயபுர மாரியம்மன் கோவில், சென்னை சாலை பெரிய மாரியம்மன் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜை நடந்தன. நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சென்று வழிபட்டனர்.* ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்திலுள்ள தன்வந்திரி கோவிலில், நேற்று காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, காய்கறிகள் படைத்து சிறப்பு பூஜை நடந்தது. தம்பிதுரை எம்.பி., மற்றும் பொதுமக்கள் திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், ஓசூர் சப்கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஓம்சக்தி அம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.* ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில் அதிகாலை, 4:00 மணிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை