நிலத்தகராறில் மோதல்இருதரப்பில் 2 பேர் கைது
நிலத்தகராறில் மோதல்இருதரப்பில் 2 பேர் கைதுகிருஷ்ணகிரி,:நாகரசம்பட்டி அடுத்த என்.தட்டக்கல்லை சேர்ந்தவர் ரகுநாதன், 44. அதே பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 60. உறவினர்களான இவர்களுக்குள் நிலப்பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதில், படுகாயமடைந்த ரகுநாதன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவர் புகார் படி, நாகரசம்பட்டி போலீசார், திருநாதன், 38, பரந்தாமன், 36, ஆகியோரை கைது செய்தனர். நல்லதம்பி, செந்தில்குமார் மீது வழக்கு பதிந்தனர். அதேபோல செந்தில்குமார் மனைவி அபிராமி புகார் படி செல்வம், 63, ரகுநாதன், 44, வாசுகி, 34, ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.