உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அனுமதியின்றி கல், மண் எடுத்து சென்ற3 டிராக்டர்கள், 2 பொக்லைன் பறிமுதல்

அனுமதியின்றி கல், மண் எடுத்து சென்ற3 டிராக்டர்கள், 2 பொக்லைன் பறிமுதல்

அனுமதியின்றி கல், மண் எடுத்து சென்ற3 டிராக்டர்கள், 2 பொக்லைன் பறிமுதல்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி கற்கள், மண் எடுத்து சென்ற 3 டிராக்டர்கள், 2 பொக்லைன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு துணை தாசில்தார் பாரதி மற்றும் அலுவலர்கள் வேப்பனஹள்ளி - மகராஜகடை சாலையில் ரோந்து சென்றனர். அப்பகுதி குவாரி ஒன்றில் அனுமதியின்றி கற்கள் வெட்டப்பட்டது தெரிந்தது-. இது குறித்த புகார் படி, வேப்பனஹள்ளி போலீசார், பொக்லைனை பறிமுதல் செய்தனர்.பாரூர் வி.ஏ.ஓ., சுதாகர் மற்றும் அலுவலர்கள் பட்டாளம்மன் கோவில் பக்கமாக ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற, 2 டிராக்டர்களை சோதனையிட்டதில், ஒரு யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது.இது குறித்து சுதாகர் புகார் படி, பாரூர் போலீசார் வழக்குப்பதிந்து, 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.வெப்பாலம்பட்டி வி.ஏ.ஓ., ராகேஷ் சர்மா மற்றும் அலுவலர்கள் போச்சம்பள்ளி அருகே வெப்பாலம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பொக்லைன் உதவியுடன் டிராக்டரில் மண் ஏற்றப்பட்டிருந்தது. அதிகாரிகளை கண்டதும் பொக்லைன், டிராக்டர் டிரைவர் தப்பி ஓடினர். ராகேஷ் சர்மா புகார் படி, போலீசார், பொக்லைன் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை