மேலும் செய்திகள்
பனை விதை நடவு பணி
03-Sep-2024
பாலக்கோடு: பாலக்கோடு சுற்று வட்டார ஏரிகளில், நெடுஞ்சாலை துறை சார்பில், 5 லட்சம் பனை விதைகள் நடும் பணி நேற்று தொடங்கி-யது.தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வழிகாட்டுதலின் படி, பாலக்-கோடு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளிலுள்ள இராமியம்பட்டி, புலிக்கரை, சுண்ணாம்-பட்டி, நிம்மாங்கரை உட்பட, 20-க்கும் மேற்பட்ட ஏரிகளில் பனை விதைகள் நடவு செய்யும் பணியை, உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்கரசி இராமியம்பட்டி ஏரிக்கரையில் நேற்று பனை விதை நடவு செய்து, பணியை துவக்கி வைத்தார்.இதில், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரஞ்சித், சாலை ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் பனை விதை நடவு செய்-தனர்.
03-Sep-2024