உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மும்பை போலீஸ் அதிகாரி என மிரட்டி தனியார் ஊழியரிடம் ரூ.8.12 லட்சம் மோசடி

மும்பை போலீஸ் அதிகாரி என மிரட்டி தனியார் ஊழியரிடம் ரூ.8.12 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி: ஓசூர் தனியார் நிறுவன ஊழியரிடம், மும்பை போலீஸ் அதிகாரி போல் பேசி, 8.12 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அண்ணாமலை நகரை சேர்ந்தவர் குமார், 25; தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைலில் கடந்த ஆக., 29 ல் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டனர். எதிர்மு-னையில் பேசியவர், 'நாங்கள் மும்பையிலுள்ள கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் பெயரிட்டு சட்ட விரோதமான போதை பொருட்கள் வந்துள்ளன. நான் உங்கள் அழைப்பை மும்பை போலீசுக்கு அனுப்புகிறேன், அவர்களிடம் பேசுங்கள்' என்றார். இதையடுத்து போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக்-கொண்ட நபர் பேசுகையில், 'உங்கள் மொபைல் எண், பெயரில் சட்ட விரோதமான போதை பொருட்கள் வந்துள்-ளன. உங்கள் மீது வழக்குப்பதிய வேண்டும்' என்றார். பயந்து போன குமார், தன் மீது வழக்கு எதுவும் பதிய வேண்டாம் கேட்டக்கொண்ட போது, அவர், '9 லட்சம் ரூபாயை, நாங்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கவும்' எனக்கூறினர்.அதை நம்பிய குமார், அவர் கூறிய வங்கி கணக்குகளுக்கு, 8.12 லட்சம் ரூபாயை அனுப்-பினார். இதன் பின் அவருக்கு, எந்த தகவல்களும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமார், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ