| ADDED : ஆக 10, 2024 07:18 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர இ.கம்யூ., கட்சி சார்பில், மத்திய அரசு கொண்டு வந்த, 3 புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து, ஓசூர் நீதிமன்ற நுழைவு வாயில் முன், சட்ட நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது. மாநில குழு உறுப்பினர் மாதையன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமையா கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி, சட்ட நகல்களை கட்சியினர் தீயிட்டு எரித்தனர். அப்-போது, போலீசார் தலையிட்டு அவற்றை தடுக்க முயன்றதால் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. *தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகம் எதிரில், நேற்று இ. கம்யூ., கட்சி சார்பில், மாநிலம் தழுவிய சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சிற்றரசு தலைமை வகித்தார். * கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டு அருகில், இ.கம்யூ., கட்சி சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 3 புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து, நேற்று நகல்கள் எரிப்பு போராட்டம் நடந்-தது. தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார்.