உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / த.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்

த.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்

த.வெ.க., கண்டன ஆர்ப்பாட்டம்கிருஷ்ணகிரி:பெண்கள் மீதான வன்கொடுமை மற்றும் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிராக, கிருஷ்ணகிரி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், மத்திய மாவட்ட, த.வெ.க., சார்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை கண்டிப்பதோடு, இவற்றை தடுக்க தவறிய மாநில அரசை கண்டிக்கின்றோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 4 நாட்களுக்கு ஒரு பாலியல் குற்ற சம்பவம் நடந்து வருகிறது.இதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும், மாநில அரசை வன்மையாக கண்டிக்கின்றோம். மும்மொழி கல்வி எங்களுக்கு தேவையில்லை எனக்கூறி, கண்டன கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை