உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாங்க ஆட்களின்றி வீணாகும் தர்பூசணி

வாங்க ஆட்களின்றி வீணாகும் தர்பூசணி

வாங்க ஆட்களின்றி வீணாகும் தர்பூசணிபோச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, களர்பதியை சேர்ந்தவர் காஞ்சனா, 65. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சொட்டு நீர் பாசனம் மூலம், 2 ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்து வருகிறார். கடந்தாண்டு வரை கிலோ, 10 ரூபாய் முதல், 25 ரூபாய் வரை மொத்த விற்பனையாக வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றனர். இதனால் நஷ்டமின்றி ஓரளவிற்கு லாபம் கிடைத்து வந்தது. இந்நிலையில் இந்தாண்டு ஏக்கருக்கு, 20,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் வரை செலவு செய்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள தர்பூசணியை கிலோ, 2 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்டு விட்டு, வந்து வாங்கிக் கொள்கிறேன் என சென்று விடுகிறார்கள். இதனால், தர்பூசணியை ஒரு சிலர் ஏரிகளில் உள்ள மீன்களுக்கு உணவாக போட கிலோ, 1.50 ரூபாய்க்கு கேட்கின்றனர். இதனால், தர்பூசணி விவசாயிகள், கடும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இதனால் வேறு வழியின்றி, அறுவடை செய்யாமல், தர்பூசணி காய்களை நிலத்தில் அப்படியே விவசாயிகள் விட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ