உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓ.ஏ.பி., வழங்குவதில் முறைகேடுஅலைக்கழிக்கப்படும் முதியோர்

ஓ.ஏ.பி., வழங்குவதில் முறைகேடுஅலைக்கழிக்கப்படும் முதியோர்

ஓ.ஏ.பி., வழங்குவதில் முறைகேடுஅலைக்கழிக்கப்படும் முதியோர்போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, சந்துார், காட்டாகரம், எம்.ஜி.அள்ளி உள்ளிட்ட கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு ஓ.ஏ.பி., வழங்கப்படுகிறது. இதில் கடந்த, 3 மாதங்களுக்கு முன்பு, சந்துாரிலுள்ள வங்கி மூலம், முதியோர்களுக்கு ஓ.ஏ.பி., வழங்கி வந்த, 3 தற்காலிக பணியாளர்கள், எவ்வித அறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதி முதியோர், தங்களுக்கு வழங்கப்படும் ஓ.ஏ.பி.,களை பெற முடியாமல் அலைகழிப்புக்கு ஆளாகினர். தற்போது, ஒரு மாதத்திற்கு பிறகு அடுத்த மாதமும் சேர்த்து, 2 மாதம் என ஓ.ஏ.பி., வழங்கப்பட்டு வருவதாகவும், அதில் ஒரு சிலருக்கு கடந்த மாதமே ஓ.ஏ.பி., வழங்கி விட்டதாக கூறி, ஒரு மாதம் மட்டும் வழங்குவதாகவும், முதியோர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அவ்வாறு ஓ.ஏ.பி., வழங்கும் நபர்கள், 1,200 ரூபாய்க்கு, 40 ரூபாயும், 1,500 ரூபாய் பெறும் பயனாளிகளிடம், 50 ரூபாய் எனவும் கட்டாய வசூல் செய்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து முதியோர்களை அலைகழிக்காமல், முறையாக ஓ.ஏ.பி., வழங்க நடவடிக்கை எடுக்க முதியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி முதியோர், போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்திலுள்ள சமூக பாதுகாப்பு தாசில்தாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ