மகாவீர் ஜெயந்தியையொட்டிடாஸ்மாக் இன்று மூடல்
மகாவீர் ஜெயந்தியையொட்டிடாஸ்மாக் இன்று மூடல்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:மகாவீர் ஜெயந்தி தினமான இன்று (10ம் தேதி) காலை, 10:00 மணி முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்வது, மதுபானங்கள் கொண்டு செல்வதும் தமிழ்நாடு மதுபான விதிகளின் படி முடக்கம் செய்யப்படுகிறது. இந்த விதிமுறைகளை மீறி விற்பனை செய்தாலோ, கொண்டு சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.