பைக்கிலிருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
பேரிகை, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த குடிசாதனப்பள்ளி அருகே சிகரலப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடராமப்பா மனைவி ஜெயம்மா, 70. கடந்த, 22ம் தேதி உடல்நிலை சரியில்லாததால், தனது மகன் ராமச்சந்திரன், 48, என்பவருடன், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் பேரிகை அரசு மருத்துவமனைக்கு சென்றார். முதுகுறுக்கி - பேரிகை சாலையில் உள்ள பண்ணப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, வேகத்தடையில் பைக் ஏறி, இறங்கிய போது ஜெயம்மா கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார்.ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயம்மா, நேற்று முன்தினம் உயிரிழந்தார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.