மேலும் செய்திகள்
எருதுவிடும் விழா 7 பேர் மீது வழக்கு
16-Feb-2025
எருதுவிடும் விழா10 பேர் மீது வழக்கு
04-Mar-2025
எருது விடும் விழா 14 பேர் மீது வழக்குகிருஷ்ணகிரி:குருபரப்பள்ளி அடுத்த சென்னசந்திரத்தில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. குருபரப்பள்ளி போலீசார், எருதுவிடும் விழாவை நடத்திய தனபால், 39, சதீஷ்குமார், 30, கணபதி, 34, கார்த்திக், 35, நாகராஜ், 50 ஆகிய, 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அதே போல குருபரப்பள்ளி அடுத்த வீரோஜிபள்ளியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக நெடுமருதி அருகே வீரோஜிபள்ளியை சேர்ந்த நரோஜி ராவ், 46, ரங்கப்பா ராவ், 30, உதயகுமார், 33 ஆகிய, 3 பேர் மீது குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். மகராஜகடை அடுத்த தங்காடிகுப்பத்தில், நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக அந்த ஊரை சேர்ந்த நாகராஜ், 49, சிவசங்கர், சக்திவேல், கோவிந்தராஜ், கோபி, மகேந்திரன் ஆகிய, 6 பேர் மீது மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிந்தனர்.
16-Feb-2025
04-Mar-2025