உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.பி., அணை

2 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.பி., அணை

2 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.பி., அணைகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை, 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று, தன் முழு கொள்ளளவான, 52 அடியை எட்டியது.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் கடந்த, 2017 ல், முதல் ஷட்டர் உடைந்ததால், ஏராளமான தண்ணீர் தென்பெண்ணையாற்றில் வெளியேறியது. தொடர்ந்து, 2018 ல் மற்ற, 7 ஷட்டர்களும் சேதமடைந்திருக்கும் என்ற சந்தேகத்தால் அணையில், 42 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கவில்லை. பின்னர், 2020 ஜனவரியில், 7 ஷட்டர்களையும் புதிதாக மாற்ற அணையின் நீர்மட்டம், 32 அடியாக குறைக்கப்பட்டது. அணை கட்டியதிலிருந்து முதல்முறையாக கடந்த, 2020 மே, 1ல் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று அணை வறண்டது. அதன் பின்னர், 7 ஷட்டர்களும் புதிதாக அமைக்கப்பட்ட பின், அணையில், 50 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டு வந்தது. பிறகு, 2022 டிச., 25 ல் ஒரு முறை மட்டும் அணை, முழு உயரமான, 52 அடியை எட்டியது. பின்னர் நீர்வரத்து இருந்தாலும், அணை நீர்மட்டம், 51 அடியாக மட்டுமே வைத்திருந்தனர். இம்மாத துவக்கத்தில் இருந்து, படிப்படியாக நீர் இருப்பை அதிகரித்து வந்ததால், 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று, அணை நீர்மட்டம், 52 அடியாக, தன் முழு கொள்ளளவை எட்டியது. வழக்கமாக அணை நீர்மட்டம், 51 அடியாக வைத்திருக்க வேண்டி, படிப்படியாக நீர் இருப்பு குறைக்கப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை