மேலும் செய்திகள்
மண் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது
11-Feb-2025
ஜல்லி, மண் கடத்தல்4 லாரிகள் பறிமுதல்ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்ட, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி மற்றும் சூளகிரி அடுத்த சின்னாறு என இரு இடங்களில், வாகன சோதனை செய்தனர்.அப்போது, அவ்வழியாக வந்த, 4 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, ஒரு லாரியில், 6 யூனிட் ஜல்லி, மற்றொரு லாரியில், 7 யூனிட் எம்.சாண்ட் மற்றும் மேலும் இரு லாரிகளில் மொத்தம், 8 யூனிட் மண் கடத்தி செல்வது தெரிந்தது.இதனால், 4 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
11-Feb-2025