உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆபாசமாக பேசியதால் தாக்கப்பட்ட மேஸ்திரி பலி; 2 சிறுவர்கள் கைது

ஆபாசமாக பேசியதால் தாக்கப்பட்ட மேஸ்திரி பலி; 2 சிறுவர்கள் கைது

ஓசூர்:தேன்கனிக்கோட்டை அருகே, குடிபோதையில் ஆபாசமாக பேசிய கட்டட மேஸ்திரியை சிறுவர்கள் தாக்கியதில் பலியானார். இது தொடர்பாக, 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே புதுார் கிராமத்தை சேர்ந்தவர் தம்பிதுரை, 23, கட்டட மேஸ்திரி; நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை மஞ்சுநாத் லேஅவுட் பேஸ்- 2 ல் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு, இரவு, 7:15 மணிக்கு குடிபோதையில் சென்றார். அங்கு, கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டிற்கு செல்ல தயாரான சிறுவர்களை, ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த சிறுவர்கள், தம்பிதுரையை தாக்கி, கீழே பிடித்து தள்ளினர். இதில் தம்பிதுரைக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த டாக்டர், தம்பிதுரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். முதலில் சந்தேக மரணம் என, தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், தம்பிதுரை தலையில் காயமடைந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அதை கொலை வழக்காக நேற்று மாற்றிய போலீசார், தம்பிதுரையை தாக்கி கொன்றதாக, புதுாரை சேர்ந்த, 17 வயது கூலித்தொழிலாளி மற்றும் பிளஸ் 1 படிப்பை பாதியில் நிறுத்திய, 16 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை