உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி மாணவர்களுக்கு வங்கி சார்பில் உதவித்தொகை

அரசு பள்ளி மாணவர்களுக்கு வங்கி சார்பில் உதவித்தொகை

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே டி.கொத்தனுார் கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி இயங்குகிறது. இங்கு பொருளாதாரத்தில் பின்-தங்கியுள்ள, நன்றாக படிக்கும் மாணவ, மாணவியருக்கு, கனரா வங்கி தேன்கனிக்கோட்டை கிளை சார்பில், உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வங்கி மேலாளர் சுவாதி மொத்தம், 40,000 ரூபாயை மாணவ, மாணவியருக்கு உதவித்தொகையாக வழங்கினார். அப்போது, வங்கி மூலம் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உயர்க்-கல்வி கடன் குறித்து எடுத்துரைத்தார்.மேலும், 60,000 ரூபாய் மதிப்பில், பள்ளிக்கு தேவையான நான் மேக்னடிக் ஒயிட் போர்டு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் வேணுகோபால் மூலம், பள்ளிக்கு ஒயிட் போர்டு வழங்கப்பட்-டது. தலைமையாசிரியர் முனிரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ