| ADDED : ஆக 01, 2024 01:45 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார். மாவட்ட செய-லாளர் முருகன் பேசினார். இதில், ஊத்தங்கரையில் ஒருங்கி-ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணிபுரிந்து, 2016ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், 40க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்கள் பணியில் இருந்த ஓய்வு பெறும் வரை ஊதி-யத்தில் பிடித்தம் செய்த பொது வைப்புநிதி, சிறப்பு வைப்பு நிதி ஆகியவற்றுக்கான இறுதித்தொகை, இன்று வரை வழங்காததை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர். இது சம்பந்தமாக, மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட அலுவலர், ஓய்வூதியர் குறைதீர் கூட்-டத்தில் தொடர்ந்து மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவ-டிக்கையும் இல்லை. ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்கள் வழங்-காமல் இழுத்தடிக்கப்படுகிறது என கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் சரவணபவன், தண்டபாணி, கோவிந்தம்மாள், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.