உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 28 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 28 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

கிருஷ்ணகிரி, : தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 1996ம் ஆண்டு, 12ம் வகுப்பு படித்த மாணவ, மாண-வியர், தங்களது படிப்பை முடித்து விட்டு, தற்போது பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், 28 ஆண்டுகளுக்கு பிறகு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் ஒன்று கூடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 29 முன்னாள் மாணவ, மாணவியர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் தாங்கள் பள்ளியில் படித்த-போது நடந்த நினைவுகளையும், வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வருவதையும், குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களையும், பழைய, புதிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு, குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து, அணை பூங்-காவில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என, 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ