உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் இடமாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் இடமாற்றம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 11 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி பறக்கும்படை தனி தாசில்தார் சின்னசாமி, ஓசூர் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சிப்காட் யூனிட் 3, பகுதி 3, தனி தாசில்தார் சத்யா, போச்சம்பள்-ளிக்கும், ஓசூர் இனாம் செட்டில்மென்ட் அலகு 2, தனி தாசில்தார் மாதேஷ், அஞ்செட்டிக்கும், தேன்கனிக்கோட்டை தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) மோகன்தாஸ், சூளகிரிக்கும், சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் கோகுல்நாத், தேன்கனிக்கோட்டை தாசில்தாராகவும், ஓசூர் தாசில்தார் விஜயகுமார், கிருஷ்ணகிரி பறக்கும்படை தனி தாசில்-தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல், தேன்கனிக்கோட்டை தாசில்தார் பரிமேலழகன், ஓசூர் இனாம் செட்டில்மென்ட் அலகு 2, தனி தாசில்தாராகவும், சூளகிரி தாசில்தார் சக்திவேல், தேன்கனிக்கோட்டை சமூக பாது-காப்பு திட்ட தனி தாசில்தாராகவும், போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரன், கிருஷ்ணகிரி சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலு-வலரின் நேர்முக உதவியாளராகவும், அஞ்செட்டி தாசில்தார் மகேஸ்வரி, கிருஷ்ணகிரி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தா-ராகவும், அங்கு பணிபுரிந்து வந்த சரவணமூர்த்தி சிப்காட் யூனிட் 3, பகுதி 3, தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்-டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை