உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பணம் தராத ஆத்திரம்; தந்தை மீது வாகனத்தால் மோதிய மகன் கைது

பணம் தராத ஆத்திரம்; தந்தை மீது வாகனத்தால் மோதிய மகன் கைது

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த அகலக்கோட்டையை சேர்ந்தவர் ஆனந்தப்பா, 50, விவசாயி; இவரது மகன் திம்மராஜ், 25, டிரைவர்; சூதாட்டம் மற்றும் மது பழக்கத்தால், 2 லட்சம் ரூபாய் வரை இழந்த அவர், நிலத்தை விற்று பணம் தருமாறு தந்தை ஆனந்தப்பாவிடம் கேட்டார். அதனால் நிலத்தை தன் பேரன் பெயருக்கு, ஆனந்தப்பா பத்திரப்-பதிவு செய்து கொடுத்தார். நிலத்தை விற்று கொடுக்காததால் ஆத்-திரமடைந்த திம்மராஜ், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, ஈச்சர் வாகனத்தை ஓட்டி சென்று, ஜவளகிரி - பாலதொட்டனப்-பள்ளி சாலையில் நடந்து சென்ற தந்தை ஆனந்தப்பா மீது மோதினார்.இதில் காயமடைந்த அவர், தேன்கனிக்கோட்டை தனியார் மருத்-துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனந்தப்பா புகார் படி, தளி போலீசார், திம்மராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்