உள்ளூர் செய்திகள்

தீ தடுப்பு ஒத்திகை

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீயணைப்புத்துறை சார்பில், ஒன்னகரை காப்புக்காடு பகுதியில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நேற்று நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமன் தலைமை வகித்தார். இதில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர், வனத்துறையினருடன் சேர்ந்து காட்டுத்தீயை எவ்வாறு அணைப்பது என, செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். ஒத்திகையில், தீயணைப்பு வீரர்கள், வனக்காப்பாளர் கிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை