தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
போச்சம்பள்ளி:பர்கூர் ஒன்றியம், போச்சம்பள்ளி அருகே, 8ம் வகுப்பு மாணவி, 3 ஆசிரியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து, போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகம் எதிரில், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமையில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், தமிழகத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்களை தி.மு.க., அரசு, கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி, கண்டன கோஷங்களை எழுப்பினர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டியும், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரிக்கை வைத்தனர்.மாவட்ட அவைத்தலைவர் முருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, அப்பாபிள்ளை மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பலராமன் உள்ளிட்ட தே.மு.தி.க.,வினர், 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.