உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அனுமதியின்றி எருது விழா10 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி எருது விழா10 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி எருது விழா10 பேர் மீது வழக்கு பதிவுகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த கொண்டேப்பள்ளி பைரவர் கோவில் அருகில், நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்ததாக, வி.ஏ.ஓ., கிருஷ்ணன், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, விழாவை ஏற்பாடு செய்த கொண்டேப்பள்ளி சின்னசாமி மற்றும் நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அதேபோல், வேப்பனஹள்ளி அடுத்த அரியனப்பள்ளியில் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்ததாக வி.ஏ.ஓ., யசோதா அளித்த புகார்படி, வேப்பனப்பள்ளி போலீசார், எருது விடும் விழா நடத்திய ராமகிருஷ்ண கவுடு மற்றும் நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி