உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 14 வயது சிறுமிக்கு கட்டாயதிருமணம் செய்த 3 பேர் கைது

14 வயது சிறுமிக்கு கட்டாயதிருமணம் செய்த 3 பேர் கைது

14 வயது சிறுமிக்கு கட்டாயதிருமணம் செய்த 3 பேர் கைதுஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த தொட்டமஞ்சு அருகே கரகூர் கிராமத்தை ஒட்டிய காளிக்குட்டையை சேர்ந்தவர் மாதேஷ், 29. கூலித்தொழிலாளி.இவருக்கும், அருகிலுள்ள மற்றொரு கிராமத்தை சேர்ந்த உறவினரான, 7ம் வகுப்பு வரை படித்துள்ள, 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய, இரு வீட்டார் முடிவு செய்தனர்.இதில் சிறுமிக்கு விருப்பவில்லை. இதனால் கடந்த, 10 நாட்களுக்கு முன் சிறுமியை பெங்களூரு அழைத்து சென்று கடந்த, 3ல் சிறுமியின் தாய் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்த சிறுமி, திருமணம் பிடிக்கவில்லை எனக்கூறி, தன் பாட்டியிடம் கூறி அழுது, கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.மாதேஷ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், சிறுமியை நேற்று முன்தினம் குண்டு கட்டாக வீட்டிற்கு துாக்கி சென்றனர். அழுதபடி சிறுமியை அவர்கள் துாக்கி செல்லும் காட்சிகள் வைரலானது. சிறுமியின் பாட்டி, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். இதையடுத்து காளிக்குட்டை கிராமம் சென்ற போலீசார், சிறுமியை திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ், 35, மற்றும் சிறுமியின் தாய் நாகம்மா, 29, ஆகிய, 3 பேரை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை