உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மத்துாரில் தொடர் திருட்டு2 வாலிபர்கள் சிக்கினர்

மத்துாரில் தொடர் திருட்டு2 வாலிபர்கள் சிக்கினர்

கிருஷ்ணகிரி:மத்துார் சுற்று வட்டாரத்தில், கடந்த சில தினங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தன. மத்துார், திருவண்ணாமலை சாலையில் ஒட்டப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த, 11ல், தன் கடை முன் நிறுத்தியிருந்த டாடா இண்டிகா கார், மறுநாள் மாயமானது. மத்துார் போலீசில் புகாரளித்தார்.கடந்த, 22ல், மத்துார் அடுத்த பில்லகொட்டாயை சேர்ந்த கமலேசன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, 6 பவுன் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடினர். கமலேசன் மத்துார் போலீசில் புகாரளித்தார். தொடர் திருட்டு சம்பவங்களை விசாரிக்க மத்துார் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பகுதிகளில், 'சிசிடிவி' காட்சிகளை வைத்து பார்த்ததில், தொடர் திருட்டில் ஈடுபட்டது கர்நாடக மாநிலம், பெங்களூரு, மடிவாளாவை சேர்ந்த மணி, 28, கிரண், 28 ஆகியோர் என தெரிந்தது. கர்நாடக மாநில போலீசார் உதவியுடன் பெங்களூருவில் பதுங்கியிருந்த அவர்களை, மத்துார் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ஏழரை பவுன் நகை, ஒரு காரை போலீசார் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை