உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நல்லுார் ஸ்டேஷன் காவலர் ஆனந்த்பாபு மற்றும் போலீசார், டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் உத்தரவின்படி, பாகலுார்-பேரிகை சாலையில், தும்மன-ஹள்ளி ஏரிக்கரையில் வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை சோதனை செய்ய நிறுத்திய போது, டிரைவர் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பியோடினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், டிராக்டரில் சோதனை செய்த போது, ஒரு யூனிட் ஏரி மண் இருந்தது. டிராக்டரை பறி-முதல் செய்த போலீசார், பாகலுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து டிராக்டர் டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை