| ADDED : ஜூலை 02, 2024 06:09 AM
கிருஷ்ணகிரி : பட்டதாரி இளைஞர்கள் வேளாண் தொழில் முனைவோராக விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை ஊக்கு-விக்கும், வேளாண் தொழில் முனைவோராக்கும் விதமாக, பட்ட-தாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் உள்ளது. இளநிலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்க-ளுக்கு வேளாண் சார்ந்த தொழில் துவங்க பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பட்டதாரி இளைஞர்கள் தங்களது மூலத-னத்தில் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்-களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண் உட்கட்ட-மைப்பு நிதி திட்டத்தில், அனுமதிக்கக்கூடிய தொழில்கள் மட்-டுமே நிறுவ வேண்டும். விண்ணப்பிக்க, 21 வயது நிரம்பிய, 40 வயதிற்கு உட்பட்ட, இளங்கலை பட்டப்படிப்பு முடித்த, அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக்கூடாது. கணினி தொழில்நுட்பம் தெரிந்தவராக இருக்க வேண்டும். விருப்-பமுள்ள இளைஞர்கள், 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்-டியல், இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வங்கி மூலம் கடன் பெற அதற்கான ஒப்புதல் ஆவணம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரி-வித்துள்ளார்.