உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அ.தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு

அ.தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த அத்திமுகம் கிராமத்தில், சூளகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்ப்பூசணி, நீர்மோர், வெள்ளரிக்காய் போன்றவற்றை வழங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் சதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை