உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் நிறுவன ஊழியர் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் மாயம்

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே எண்ணேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர், 33. தனியார் நிறுவன ஊழியர்; இவருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த, 10 நாட்களுக்கு முன் அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். விரக்தியடைந்து கடந்த, 29 காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சுதாகர் மீண்டும் திரும்பி வரவில்லை. அவரது தந்தை முனியப்பா, 63, கொடுத்த புகார்படி, தேன்கனிக்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்