இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
போச்சம்பள்ள : போச்சம்பள்ளி அடுத்த தாமோதரஹள்ளி, சின்னபாறையூரை சேர்ந்தவர் கண்ணாயிரம், 65; இவரின் தம்பி பழனி, 61; இருவ-ருக்கும் பொதுவாக மோழிவாயனுார் கிராமத்தில், 3 ஏக்கர் நிலமும், சின்னபாறையூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலமும் உள்ளது.இது தொடர்பாக இருவருக்கும், 10 ஆண்டுகளுக்கு மேலாக தக-ராறு உள்ளது. இந்நிலையில் பழனி, சின்னபாறையூர் கிராமத்தில், அவரது நிலத்தில் புதியதாக வீடு கட்டி வருகிறார். கண்ணாயிரம் மகன் கணபதி, பழனி வசித்த பழைய குடி-சைக்கு தீ வைத்ததில் எரிந்து நாசமானது. நேற்று முன்தினம் மதியம், அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. அப்-போது பழனியின் கழுத்து பகுதியில் கண்ணாயிரம் வெட்டியதில், சம்பவ இடத்தில் பலியானார். தடுக்க வந்த பழனி மகன் பெரிய-சாமி கையில் பலத்த காயமடைந்தார். பாரூர் போலீசார் கண்ணா-யிரம், கணபதி இருவரையும் கைது செய்த நிலையில், தலைமறை-வாக உள்ள கவிதா, சிவகாமி இருவரையும் கைது செய்ய வேண்டும்.அப்போது தான் இறந்த பழனியின் உடலை வாங்குவோம் என, அவரின் உறவினர்கள் தொடர்ந்து சின்னபாறையூர் கிராமத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பர்கூர் டி.எஸ்.பி., முத்துகி-ருஷ்ணன், பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் நேற்று மாலை, 5:00 மணி வரை சமாதானம் செய்தும், பழனியின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.