உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த காவாப்பட்டியை சேர்ந்தவர் வேடியம்மாள், 60. இவருக்கும் ராஜா, 35, என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்தது. கடந்த, 14ம் தேதி ஏற்பட்ட பிரச்னையில், வேடியம்மாளை ராஜா தாக்கியுள்ளார். வேடியம்மாள் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார், ராஜாவை கைது செய்தனர். கிருஷ்ணகிரி, பெரிய மோட்டூரை சேர்ந்தவர் அன்பரசி, 29. இவர் அப்பகுதியிலுள்ள வெங்கட்ராமன், 30 என்பவரது செங்கல்சூளையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிலர், குடிபோதையில் அப்பகுதியில் கூச்சலிட்டு தகராறு செய்துள்ளனர். இது குறித்து வெங்கட்ராமனிடம் கூறிய அன்பரசியை திட்டி, தாக்கியுள்ளார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வெங்கட்ராமனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை