உள்ளூர் செய்திகள்

இருவர் மாயம்

ஊத்தங்கரை:உத்தனப்பள்ளி அருகே கீரனப்பள்ளியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி சுதாராணி, 30. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது கணவர் உத்தனப்பள்ளி போலீசில் கொடுத்த புகாரில், பெங்களூருவை சேர்ந்த வெங்கடேஷ், 25, மீது, சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.போச்சம்பள்ளி அருகே, கீழ்மைலம்பட்டியை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் லோகேஸ்வரி, 20. ஊத்தங்கரை அருகே, தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாமாண்டு படிக்கிறார். கடந்த, 29ம் தேதி கல்லுாரியிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தாய் லட்சுமி, 40, ஊத்தங்கரை போலீசில் கொடுத்த புகாரில், சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை சேர்ந்த சிவா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !