உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆம்னி பஸ்கள் உட்பட 11 வாகனங்கள் பறிமுதல்ரூ.10 லட்சம் அபராதம்

ஆம்னி பஸ்கள் உட்பட 11 வாகனங்கள் பறிமுதல்ரூ.10 லட்சம் அபராதம்

ஆம்னி பஸ்கள் உட்பட 11 வாகனங்கள் பறிமுதல்ரூ.10 லட்சம் அபராதம்ஓசூர்:வேலுார் சரக செயலாக்க பிரிவு வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி, ஓசூர் போக்குவரத்து சோதனைச்சாவடி (வெளிவழி) மோட்டார் வாகன ஆய்வாளர் ரமணன் ஆகியோர், பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓசூர் இ.எஸ்.ஐ., மற்றும் சிப்காட் ஜங்ஷன் ஆகிய பகுதிகளில், நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, தமிழக அரசிற்கு வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட, 7 ஆம்னி பஸ்கள், பர்மிட் மற்றும் வரி செலுத்தாத, 3 லாரிகள், தகுதிச்சான்று, அனுமதி சீட்டு மற்றும் வரி செலுத்தாத ஒரு கார் என மொத்தம், 11 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து மொத்தம், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஒரு லாரிக்கு மட்டும், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தி, உரிமையாளர் எடுத்து சென்றார். மற்ற வாகனங்கள் அபராதம் செலுத்திய பின் விடுவிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ