உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 182 வாகனங்கள் வரும் 8ல் ஏலம்

182 வாகனங்கள் வரும் 8ல் ஏலம்

ஓசூர்;ஓசூரில், மது குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 182 வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. இது குறித்து, மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, மது குற்றங்களில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஆறு சக்கர வாகனம் ஆகியவற்றினை தானியங்கி பொறியாளர், மோட்டார் வாகனங்களின் தற்போதைய மதிப்பு நிர்ணயம் செய்தும், அறிக்கை பெறப்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணகிரி ஆயுதப்படை வளாகம், கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு வளாகம், ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு வளாகம் மற்றும் ஓசூர் டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள, 182 இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஆறு சக்கர வாகனங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு குறையாமல் பொது ஏலம் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகனங்கள் ஜூன், 8 காலை, 11:00 மணிக்கு ஓசூர் டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு, வாகனங்களை ஏலம் எடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ