உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போதையில் பைக் ஓட்டிய 2 பேர் கைது

போதையில் பைக் ஓட்டிய 2 பேர் கைது

ஓசூர்: ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., பயாஸ், நாமல்பேட்டை பகுதியிலும், சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., சிரஞ்சீவிகுமார், பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், சிப்காட் ஜங்ஷன் பகுதியிலும் தனித்தனியாக வாகன சோதனை செய்தனர். அப்போது, மதுபோதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த, ஓசூரை சேர்ந்த சம்பத்குமார், 42, தர்கா ஈஸ்வரி கார்டனை சேர்ந்த பிரதாப், 32, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.விபத்தில் கோவில் பூசாரி பலிகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கங்கோஜி கொத்தூரை சேர்ந்தவர் முனிராமப்பா, 59, எர்ரப்பள்ளி முருகன் கோவில் பூசாரியாக இருந்தார்; கடந்த, 16ல் வேப்பனஹள்ளி அருகே தீர்த்தம் சாலையில் டி.வி.எஸ்., பெப் ஸ்கூட்டியில் சென்றார். அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த பலியானார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ