உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2 இளம்பெண்கள் உட்பட 3 பேர் மாயம்

2 இளம்பெண்கள் உட்பட 3 பேர் மாயம்

ஓசூர் : ஓசூர், அலசநத்தம் சாலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணாரெட்டி மகள் ரக்சிதா, 25; கடந்த, 8 இரவு, 11:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தந்தை புகார்படி, ஹட்கோ போலீசார் ரக்சிதாவை தேடி வருகின்றனர்.அஞ்செட்டி அடுத்த பதிகவுண்டனுார் அருகே கல்லுப்பள்ளத்தை சேர்ந்தவர் தனலட்சுமி, 21, கூலித்தொழிலாளி; கடந்த, 2ல் காலை, 10:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது அண்ணன் லட்சுமணன், 23, புகார்படி, அஞ்செட்டி போலீசார் தேடி வருகின்றனர்.ஓசூரை சேர்ந்த, 16 வயது சிறுமி, 10ம் வகுப்பு முடித்துள்ளார்; நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் வசிக்கும், விசாகப்பட்டணத்தை சேர்ந்த வஜ்ரபோ கணேஷ், 22, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ