உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி கிருஷ்ணகிரியில் விரைவில் துவக்கம்

30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி கிருஷ்ணகிரியில் விரைவில் துவக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி, சென்னை சாலையிலுள்ள அரசு ஆடவர் கலைக்கல்லுாரி விளை-யாட்டு மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்காக அரங்குகள் அமைக்கும் பணி, கடந்த ஜூலை மாதம் இறுதியில் துவங்கியது. ஆக., 2வது வாரத்தில் கண்காட்சி துவங்கும் என தெரிவித்த நிலையில், விளையாட்டு உபகரணங்கள், பொழுதுபோக்கு அம்-சங்கள் ஒப்பந்தம் பெறுவதில், கால தாமதம் ஏற்பட்டதால், கண்-காட்சி துவங்குவது தள்ளிப்போனது. தற்போது, விளையாட்டு அரங்குகள் அமைக்கும் பணிகள், முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆனாலும், மா சீசன் காலத்தில் கண்காட்சியை நடத்தாமல், காலம் தாழ்த்தி நடத்துவதால், எவ்வித பயனும் இல்லை என விவசாயிகளும், காலாண்டு தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், கண்காட்சி நடத்துவது மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என பெற்றோர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'கண்காட்சியை பொறுத்த-வரை மா சீசன் காலத்தில் நடத்தினால் தான், மாங்காய்களை காட்-சிப்படுத்தி போட்டிகளில் பங்கேற்க முடியும். இந்த ஆண்டு மாசீசன் முடிந்த நிலையில், கண்காட்சி எப்போது துவங்கும் என்றே தெரியவில்லை' என்றனர்.மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் பச்சையப்பன் கூறு-கையில், ''விளையாட்டு உபகரணங்கள் பொருத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அமைச்சரிடம் தேதி கேட்டு, மாங்-கனி கண்காட்சி துவங்கும் நாள், விரைவில் அறிவிக்கப்படும். கண்காட்சியில் இம்முறை, மா விவசாயிகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில், கருத்த-ரங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை