| ADDED : ஜூன் 08, 2024 03:02 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வை, 41, 325 பேர் எழுதுகின்றனர். -டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் தொடர்பாக சம்பந்தபட்ட அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப் 4 எழுத்து தேர்வு நாளை நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 8 தாலுகாக்களில் உள்ள, 131 மையங்களில், 41, 325 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகள் தொடர்பான அனைத்து பணிகளையும் கண்காணிக்க அனைத்து தாலுகாவிலும், துணை கலெக்டர் நிலையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் மின்வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி மேற்கொள்ள வேண்டும். தேர்வர்கள் தேர்வு எழுத செல்லும் வகையில் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்ய வேண்டும். துறை சார்ந்த அலுவலர்கள் அனைத்து தேர்வு மையங்களையும் ஆய்வு செய்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா மற்றும் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.