உள்ளூர் செய்திகள்

5 பேர் மாயம்

ஓசூர், ஜன. 2-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எழில் நகரை சேர்ந்தவர் துரை,40; தச்சு தொழிலாளி. இவரது மனைவி லதா, 34. கடந்த, 22 காலை, 10:30 மணிக்கு தன் மகன், மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்ற லதா திரும்பி வரவில்லை.பாகலுார் கோட்டை தெருவை சேர்ந்தவர் அனில்குமார். இவரது மனைவி லாவண்யா, ௨௪; கர்ப்பிணி கடந்த, 30 இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். பாகலுார் அருகே பெத்ததாசரப்பள்ளி தின்னா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மகள் ஸ்வப்னா, 19. நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. மூவரது குடும்பத்தினரும் போலீசில் புகார் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை