உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சேவா பாரதி நடத்திய 508 திருவிளக்கு பூஜை

சேவா பாரதி நடத்திய 508 திருவிளக்கு பூஜை

ஓசூர்;கிருஷ்ணகிரி மாவட்ட சேவா பாரதி தமிழ்நாடு சார்பில், உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், ஓசூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், 508 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். செயலாளர் ரேணுகாதேவி முன்னிலை வகித்தார். சிவன், பார்வதி சுவாமிக்கு, பத்மா விஷ்ணுகுமார் சிறப்பு பூஜையை செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பெண்கள் பங்கேற்ற, 508 திருவிளக்கு பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட சேவா பாரதி இணை செயலாளர்கள் கிருத்திகா, நிஷாந்தி, தனியார் பள்ளி தாளாளர் லட்சுமிபதி, உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ