உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையில் படமெடுத்த நாகப்பாம்பு

சாலையில் படமெடுத்த நாகப்பாம்பு

ஓசூர்: ஓசூர், ராயக்கோட்டை சாலை சந்திப்பிலுள்ள சர்வீஸ் சாலை எப்-போதும் வாகன போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்-படும். நேற்று திடீரென அப்பகுதி ஏரியிலிருந்து வெளியே வந்த ஒரு நாகப்பாம்பு குட்டி, சர்வீஸ் சாலைக்கு வந்து படமெடுத்து ஆடியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து, சாலையில் வாகனத்தை நிறுத்தினர்.சிறிது நேரம் நாகப்பாம்பு குட்டி சாலையில் படமெடுத்தப்படி நின்றது. இதை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் புகைப்-படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அவ்வழியாக வந்த ஒருவர், குச்சியால் பாம்பு குட்டியை லாவகமாக துாக்கி, ஏரிக்கரை ஓரத்தில் விட்டார். அது அங்கிருந்து ஏரிக்குள் சென்று மறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ