உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

ஓசூர், ஓசூர் ஹட்கோ ஸ்டேஷன் எஸ்.ஐ., மாதப்பன் மற்றும் போலீசார், பாகலுார் சாலையிலுள்ள இந்திரா நகரில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியிலுள்ள கடை மற்றும் குடோனில் சோதனை செய்தபோது, 67,744 ரூபாய் மதிப்புள்ள, 104 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதனால், இந்திரா நகரில் வசிக்கும் கவுதம், 52, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ