| ADDED : ஜூலை 19, 2024 02:06 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில், அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்த, அரங்கு அமைக்கும் பணி நடக்கி-றது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவில் மா விவசாயம் நடக்கி-றது. மா விவசாயிகளை ஊக்குவிக்க கடந்த, 1992 முதல் கிருஷ்-ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மாங்கனி கண்காட்சி நடத்துவதில் பல்-வேறு குழப்பங்களால் தாமதம் ஏற்பட்டது.3 முறை இடமாற்றம்கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாங்கனி கண்காட்சி நடத்துவது வழக்கம். அங்கு கண்காட்சி நடத்த எதிர்ப்பால், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே தனியார் மைதா-னத்தில் நடத்த முடிவு செய்து, மாவட்ட கலெக்டர் சரயுவும் இடத்தை ஆய்வு செய்தார். ஆனால் அந்த இடம் பைபாஸ் அருகில் இருப்பதால், விபத்து அதிகரிக்கவும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாங்-கனி கண்காட்சியை, பெத்தனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, சென்னை சாலையிலுள்ள கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்-லுாரி மைதானத்தில் நடத்த முடிவு செய்து, அரங்குகள் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.முடிவாகாத தேதிஇது குறித்து விவசாயிகள், பொதுமக்கள் கூறுகையில், 'மாங்-கனி சீசன் முடிந்தும், பல்வேறு குழப்பங்களுக்கு பிறகு, மாங்கனி கண்காட்சி நடத்த ஏற்பாடு நடக்கிறது. ஆனால், தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அரங்குகள், விளையாட்டு அரங்கம், உணவு உள்ளிட்டவைகளுக்கான ஒப்பந்தம் முழுவதுமாக முடிய-வில்லை. தேதியும் இறுதி செய்யப்படவில்லை. மா விவசாயிக-ளுக்காக நடத்தப்படும் கண்காட்சியை, முற்றிலும் வருவாய்க்காக நடத்தப்படும் நிகழ்ச்சியாக மாற்றியுள்ளனர். மாங்கனி கண்காட்சி நடத்த, அரசுக்கு சொந்தமாக நகருக்குள் உள்ள இடத்தை தேர்வு செய்யாதது வருத்தமளிக்கிறது' என்றனர்.