உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நீட் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பர்கூர் வேளாங்கண்ணி அகாடமி சாதனை

நீட் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பர்கூர் வேளாங்கண்ணி அகாடமி சாதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வேளாங்கண்ணி அகாடமியில், 2024ம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.இதில், 720க்கு, 691 மதிப்பெண்கள் பெற்று மாணவர் நரேன் கார்த்திகேயன் முதலிடம் பிடித்துள்ளார். பூவிழி, 683 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், கார்த்திகாதேவி, 681 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதே போல் ஸ்ரீதார், 672, ஹரிகரன், 670, ஜனனி, 667, யோஷிகா, யுவாஷினி 657, தரணிதரன், 656, நிரன்ஜன், 655, தமிழரசன், 654 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், 670க்கு மேல், 5 மாணவர்கள், 650க்கு மேல், 11 மாணவர்கள், 600க்கு மேல், 48 மாணவர்கள், 580க்கு மேல், 75 மாணவர்கள், 550க்கு மேல், 95 மாணவர்கள், 500க்கு மேல், 125 மாணவர்கள் பெற்றுள்ளனர். தொடர்ந்து, 5 ஆண்டுகளாக நீட் அகாடமியில் பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.வேளாங்கண்ணி அகாடமி தமிழ் வழி மாணவர்கள் முதலாம் ஆண்டிலேயே, 10-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லுாரி சேர்க்கைக்கு தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவி யமுனா, 720க்கு, 620 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அகாடமி தாளாளர் கூத்தரசன், சாதனை படைத்த மாணவகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார். வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி முதல்வர் மஞ்சுளா, பொறுப்பாளர் யுவராஜ், ஒருங்கிணைப்பாளர் வேமுலா சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி