மேலும் செய்திகள்
விவசாயி மர்மச்சாவு
05-Oct-2025
தனியார் ஊழியரிடம் ரூ.8.11 லட்சம் மோசடி
05-Oct-2025
மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்
05-Oct-2025
ஓசூர்;கெலமங்கலம் அடுத்துள்ளது சின்னட்டி கிராமம். தேன்கனிக்கோட்டை செல்லும் இச்சாலையில் துளசி நகர் அருகே, 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு மது குடிக்க வருவோரால் போக்குவரத்து பாதிப்புடன், விபத்து, உயிர்பலி ஏற்படுவதாக புகார் எழுந்தது. மேலும், இங்குள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமெனவும், கோரிக்கை எழுந்தது.நேற்று முன்தினம் சின்னட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சீனிவாசன் சைக்கிளில் சென்றபோது அவ்வழியாக சென்ற டாடா சுமோ கார் மோதியதில் பலியானார். இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும், டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமெனவும் கூறி, அவர் மனைவி முத்தம்மா கெலமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறி, இறந்த சீனிவாசன் சடலத்துடன் சின்னட்டியில், கெலமங்கலம் - தேன்கனிக்கோட்டை சாலையில் நேற்று மாலை, உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர், 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த கெலமங்கலம் போலீசார், விரைவில் விசாரித்து தீர்வு காணப்படும் என உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025