உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தாமாக விசாரிக்க ஐகோர்ட்டில் முறையீடு

தாமாக விசாரிக்க ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த போலி என்.சி.சி., முகாமில், மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் மற்றும் சிவராமன் மரணம் தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜராகி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் குறித்து முறையிட்டார்.தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கும்படி கோரினார். சம்பவம் தொடர்பாக வழக்காக தாக்கல் செய்யும்பட்சத்தில், விசாரணைக்கு எடுப்பதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை