உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நண்பரை கொன்று தலைமறைவானோர் கைது

நண்பரை கொன்று தலைமறைவானோர் கைது

ஓசூர்:அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மங்கள் ரவிதாஸ், 25. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி ராஜிவ்காந்தி நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது அறையில் கடந்த 6ம் தேதி இரவு, ஆறு பேர் தங்கினர். மறுநாள் காலை, அவரது அறையில் தங்கிய நண்பர்களில் ஒருவரான, ஓசூர் சூடசந்திரத்தைச் சேர்ந்த உமேஷ், 21, கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடன் வந்தவர்கள் தப்பிச் சென்றனர். விசாரித்த ஓசூர் சிப்காட் போலீசார், ஓசூர், பாரதிதாசன் நகரைச் சேர்ந்த சந்துரு, 25, உள்ளிட்ட ஐந்து பேரை நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:மங்கள் ரவிதாஸ் அறையில் தங்கியபோது, மது போதையில் உமேஷுக்கும், சந்துருவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சந்துரு, அறையிலிருந்த கோடாரியால், உமேஷின் பின்புற தலையில் வெட்டி கொலை செய்தார். பின், சந்துரு உட்பட ஐந்து பேரும் சேலத்திற்கு தப்பினர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை