உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ., நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்

பா.ஜ., நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி, லோக்சபா ‍தேர்தலில், பா.ஜ.,விற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் வேப்பனள்ளியில் நடந்தது.கிருஷ்ணகிரி தொகுதியில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,விற்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து, நேற்று முன்தினம் இரவு, வேப்பனஹள்ளி காந்திசிலை அருகில், மாவட்ட பொதுச்செயலாளர் அன்பரசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் இராம.சீனிவாசன், மாவட்ட பார்வையாளர் நரசிம்மன், மாநில துணைத் தலைவர் நரேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ் உள்பட பல்வேறு பொறுப்பாளர்கள் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினர். இதில், கட்சி தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, மேற்கு மாவட்ட, பா.ஜ.,வினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ