உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறுமி திருமணம் பஸ் கண்டக்டர் கைது

சிறுமி திருமணம் பஸ் கண்டக்டர் கைது

ஓசூர்: காவேரிப்பட்டணம் அருகே கதிரிபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ஹரிகிருஷ்ணன், 27. கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே இயக்கும், தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றுகிறார்.இந்த பஸ்சில் தினமும் பயணித்த, தனியார் மருத்துவமனையில் செவிலியராக பயிற்சி பெறும், 16 வயது சிறுமிக்கும், கண்டக்டர் ஹரிகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, கதிரிபுரத்திலுள்ள நரசிம்ம சுவாமி கோவிலில் வைத்து, சிறுமியை ஹரிகிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த ஓசூர் பகுதி சமூக நல அலுவலர் ராமக்கா, 59, ஹட்கோ போலீசில் புகார் செய்தார்.குழந்தை திருமண தடை சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், ஹரிகிருஷ்ணனை நேற்று முன்தினம் கைது செய்தனர். சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ