உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குப்பைக்கு வைத்த தீ பரவி கார்கள் கருகின

குப்பைக்கு வைத்த தீ பரவி கார்கள் கருகின

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பத்தலப்பள்ளி மார்க்கெட் பின்புறம், தக்காளி மார்க்கெட் உள்ளது. இதற்கு பின்னால், குமுதேப்பள்ளி காந்தி நகரிலுள்ள 'மஹிந்திரா' கார் ஷோரூமிற்கு சொந்தமான, 100க்கும் மேற்பட்ட புதிய கார்கள் நிறுத்தி வைக்கும் யார்டு உள்ளது.நேற்று மதியம், 12:30 மணிக்கு, தக்காளி மார்க்கெட்டில் இருந்த குப்பைக்கு யாரோ தீ வைத்துள்ளனர். கொளுந்து விட்டு எரிந்த தீ, அருகே யார்டிலும் பரவியது. இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, இரண்டு எக்ஸ்.யு.வி., ரக புதிய கார்கள் தீக்கிரையாகின. ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை